தங்களது கடல் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்கப் போர் கப்பல் அத்துமீறி நுழைந்ததற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.
இதனையடுத்து, ஈரானிய படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்று அதனை எதிர்கொண்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கக் கப்பல் தெற்கு நோக்கிப் பின்வாங்கிச் சென்றதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரானுடன் பாதுகாப்பான மற்றும் தொழில்முறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.