நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், திமுக சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்வான திமுக உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.