சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடமானது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் 3 நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் மூன்றாம் தரப்பு ஈடுபாடு அல்லது எந்தவொரு விரிவாக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.