வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போரின் எதிரொலியாக 14 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதலால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாக்கியிருக்கிறது. உக்ரைன், ரஷ்யா மற்றும் காசா, இஸ்ரேல் போா் அளவுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துவரும் சூடான் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையெனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போருக்கு அஞ்சி அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் 14 மில்லியனுக்கும் மேற்பட்டோா் புலம் பெயா்ந்துள்ளனா்.