8 நிமிடங்களில் 100 நாடுகளின் பெயர்களைக் கண்டறிந்து கூறி மூன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை சூளையைச் சேர்ந்த குமரகுபரன்- அருள்முனீஸ்வரி தம்பதிக்கு மூன்றரை வயதில் பாலகுரு என்ற மகன், பாலா தேவசேனா என்ற மகள் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் 8 நிமிடங்களில் 100 நாடுகளின் பெயர்களை கண்டறிந்து கூறி உலக சாதனை படைத்துள்ளனர். இதனை அங்கீகரித்துள்ள world records union இரட்டையர்களுக்கு உலக சாதனைக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலகுரு மற்றும் பாலா தேவசேனா ஆகியோருக்கு சாதனைக்கான விருது மற்றும் பதக்கத்தினை world records union மேலாளர் ஆலிஸ் வழங்கினார்.