கம்போடியாவில் இருந்தபடி உலகளவில் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டதாக 20 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்து 75 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கம்போடிய அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கம்போடிய அதிகாரிகள் 15 நாட்களில் 138 இடங்களில் சோதனை மேற்கொண்டு மூவாயிரத்து 75 பேரை கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த ஆயிரத்து 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியட்நாமை சேர்ந்த 693 பேர், இந்தோனிசியர்கள் 366 பேர், 105 இந்தியர்கள் மற்றும் வங்கதேசம், தாய்லாந்து, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் கைதாகி உள்ளனர்.
சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள், போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சீன போலீஸ் சீருடைகள், போலி இந்திய போலீஸ் சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.