விமானிகளுக்கு ஓய்வு மற்றும் பணி வழங்குவதில் விதிமீறல் நடந்திருப்பதாகக் கூறி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விமானிகளுக்கு வழங்கப்படும் பணி, ஓய்வுக்காலம், விடுப்பு ஆகியவை குறித்த தகவல்களை விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகளின் ஓய்வு, விடுப்பு , பணி வழங்கல் உள்ளிட்டவற்றில் விதிமீறல் நடந்திருப்பதாக விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனைப் பெற்றுக்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.