தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர், விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார், மூதாட்டி உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உடற்கூராய்வுக்கு பின்னர் மூதாட்டியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர்.
அப்போது உயிரிழப்பிற்கான காரணம் தெரியாமல் மூதாட்டியின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.