பணமோசடியில் தான் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்த சின்னத்திரை நடிகை ரெகானா பேகம், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி அருகே வசித்து வரும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம், ஆவடியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் ராஜ்கண்ணன் என்பவர் தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாகவும், முதலீடு எனக்கூறி பணம் பெற்று ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக இரு தரப்பையும் வரவழைத்த போலீசார், தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகை ரெகானா பேகம், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்போவதாகத் தெரிவித்தார்.