போக்சோ சட்டத்தில் உள்ள 18 வயது என்ற உச்சவரம்பைக் குறைக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
18 வயதுக்குக் கீழுள்ள இருபாலர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரத்தில் வயது வரம்பை, 18லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வயது வரம்பைக் குறைக்க முடியுமா என்பது தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, போக்சோ வழக்கில் சிறார் வயதை 18 என்ற உச்சவரம்பை குறைக்க முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.