கங்கை கொண்ட சோழபுரம் அருகே பிரதமர் மோடி வந்திறங்கவுள்ள ஹெலிபேட் தளத்தில், ஹெலிகாப்டரைத் தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித் திருவாதிரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதனையொட்டி அப்பகுதியில் 3 ஹெலிபேட் தளங்கள் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹெலிபேட் தளங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஹெலிபேட் தளங்களைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.