ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியப் பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. புதிய ஆயுதங்களைச் சோதனை செய்து பாதுகாப்புப் படையில் இணைத்து வருகிறது.
இந்நிலையில், ஆளில்லா விமானத்திலிருந்து ஏவுகணையை ஏவி டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஆந்திராவின் கர்னூலில் உள்ள டி.ஆர்.டி.ஓ. மைய வளாகத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.