பீகாரில் மாநிலத்தில் 65 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பீகாரில், நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதன்படி, பீகாரில் உள்ள 7 கோடியே 90 லட்சம் வாக்காளர்களில் 65 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைப் பதிவு, இறப்பு மற்றும் நிரந்தர குடியேற்றமின்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், குடியுரிமையை நிரூபிக்கத் தவறியவர்களின் பெயர்களும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.