கம்போடியாவுடனான மோதல் தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
கம்போடியா,தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாகச் சண்டை மூண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான இந்த மோதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பேர் இடம்பெயர்ந்து உள்ளனர். சண்டை தொடர்ந்து நீடிப்பதால், தாய்லாந்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய 8 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.