சென்னை ஜாபர்கான் பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தந்தையிடம் இருந்து வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆர்.வி.நகரை நகரை சேர்ந்த ஜேம்ஸ் – உமா தம்பதி அன்மையில் ஜாபர்கான் பேட்டைக்குக் குடிபெயர்ந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உமா தனது குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற ஜேம்ஸ் குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். .
சாவி இல்லாததால் ஆட்டோவிலேயே குழந்தையுடன் அவர் உறங்கிய நிலையில், 3 வயதுக் குழந்தை ஆட்டோவை விட்டு கீழே இறங்கியுள்ளது.
வழிதவறி சென்ற குழந்தையை நாய்கள் கடிக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.