மல்லை சத்யா குறித்துப் பேசுவதே நேர கொலை தான் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம் என்றும், அவரைப் பற்றிப் பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இன்னும் சீட் பங்கீடு குறித்துப் பேசவில்லை எனவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.