பிலிப்பைன்ஸில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தடுமாறி விழுந்த காட்சி வெளியாகியுள்ளது.
இலாய்லோ நகரில் பெய்த கனமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தார். தொடர்ந்து அவரை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.