பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகை தொகையைக் கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் அருகே பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து, நாகபாண்டி என்பவர் கறிக்கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக கடக்கைக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நாகபாண்டியை கடை விட்டு காலி செய்யுமாறு உரிமையாளர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடை உரிமையாளர் பாண்டியராஜன் வீட்டில் பாண்டியராஜன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துள்ளார்.
இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், நாகபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.