சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், பெருங்குடியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அவர் வேலையை முடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இளைஞரைக் கைது செய்தனர். மேலும், மற்றொரு பெண்ணிடமும் சீண்டலில் ஈடுபட்டதாலும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இளைஞரைச் சிறையில் அடைத்தனர்.