நாட்டைக் காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று இந்தியனாகப் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளும் நாள், கார்கில் விஜய் திவாஸ் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கார்கில் வெற்றி நாள்.
பாகிஸ்தான் பிடியில் இருந்த கார்கிலை மீட்க, நமது இந்திய ராணுவம் ‘ஆப்பரேஷன் விஜய்‘ என்ற தாக்குதல் செயல் திட்டத்தைத் தொடங்கி இதே நாளில் 1999 ஆம் ஆண்டு, வெற்றியும் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. 527 வீரர்களின் வீர மரணமும், 1000திற்கும் மேற்பட்ட வீரர்களின் தியாகமுமே இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
நம் நாட்டைக் காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை இன்றைய தினத்தில் நினைவுகூர்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.