திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்று இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் கழிவுநீர் நிலையம் சுத்திகரிப்பு நிலையம் அமைவதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாகக் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.