சென்னையில் இறுதி ஊர்வலத்தின்போது மதுபோதையில் சிலர் நாட்டு வெடி வெடித்ததில், மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அக்கரை பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமாரின் மகள் நிஷாந்தினி என்பவர், வெட்டுவாங்கேணியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், பள்ளி முடிந்து ஆட்டோவில் மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக இறுதி ஊர்வலம் கொண்டு சென்றவர்கள் நாட்டு வெடிகளை வெடித்துள்ளனர்.
திடீரென, மதுபோதையிலிருந்த நபர் மாணவி சென்ற ஆட்டோ மீது நாட்டு வெடி வீசி உள்ளார். இதில், முகத்தில் பலத்த காயமடைந்த மாணவி மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.