சென்னையில் மதுபோதை கும்பலால் தாக்கப்பட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராமன் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18ம் தேதி மதுபோதையில் இருந்த 2 பேரால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா ராமன் உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.