கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தளபதி ஏபி சிங், கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன் பீர் சிங் பிரார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்