நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பீகார் வாக்காளர் திருத்தப் பட்டியல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கின.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சபை நடவடிக்கைகள் தொடர முழு ஒத்துழைப்பு தருகிறோம் என வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் வரும் திங்கட்கிழமை முதல் இரு அவைகளும் கூச்சல் குழப்பமின்றி சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.