பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்ப்பதாகவும், அவர்களின் அணுகுமுறை தேசவிரோதமானது எனவும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
2004 முதல் 2009 வரை காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி காங்கிரஸ் சந்தேகம் எழுப்புவதாகத் தெரிவித்தார். காங்கிரஸின் இந்த அணுகுமுறை தேச விரோதமானது என்று அவர் விமர்சித்தார்.