கடலூர் மாவட்டம், புவனகிரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் உறவினர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சோர்வாக காணப்பட்டதால் சந்தேகமடைந்த தாய், அவரை சென்னையில் உள்ள சித்தியின் வீட்டில் கொண்டுசென்று விட்டுள்ளார்.
அப்போது புவனகிரியை சேர்ந்த அஜய் எனும் உறவினர், 2021-ம் ஆண்டு முதல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தனது சித்தியிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அதனை கூறி மிரட்டி, தனது காதலர் உள்ளிட்ட மேலும் மூவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் உறவினர் அஜய், காதலர் சக்தி உட்பட மூவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.