உதகையில் கன மழை காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன் படி கடந்த 2 நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
அதே சமயம் பனி மூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கினர்.
இதற்கிடையே பலத்த காற்று மற்றும் மழை காரணமாக காட்சி முனை, பைன் பாரஸ்ட், tree park ஆகிய சூழல் சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.