தூத்துக்குடி பயணத்தை முடித்து கொண்டு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவரின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இதனையொட்டி தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி பிரமரிடம் அளித்தார். மேலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க, பாஜக மற்றும் அதிமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மத்தியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கொடியும் வைக்கப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.