தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருவதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஜெய் கோபால் காரொடியா வித்யாலயா பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உயர்ந்த கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட இருப்பது தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பெருமை என தெரிவித்தார்.
துணை வேந்தர்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை அளித்துள்ளது என்றும், அது குறித்து ராஷ்டிரபதி விளக்கம் கேட்டுள்ளதால் நல்ல முடிவு வரும் என்று கூறினார். வேந்தர்கள் நியமனம் என்பது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.