புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்களை போலீசார் கைது செய்த நிலையில், 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
புழல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் விற்கப்படுவதாக நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைறியந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் 3 பெண்கள் இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளை வளர்க்க முடியாமல் விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ரதி தேவி, தீபா, வித்யா ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டதோடு 2 குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.