திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தனது நடைபயணத்தின் ஒருபகுதியாக பாமக தலைவர் அன்புமணி, ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ஏரி மாசடைவதை தடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஒரு ஏரியை கூட திமுக அரசு பாதுகாக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், நத்தபேட்டை ஏரியை மாசடையாமல் பாதுகாத்து, பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவு தொடர்பாக இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை எனவும் சாடினார்…