ஸ்காட்லாந்தில் பறக்கும் விமானத்திற்குள் வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டிய பயணி கைது செய்யப்பட்டார்.
லண்டன் விமான நிலையத்தில் இருந்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அதில் பயணித்த ஒருவர், விமானத்தில் வெடிகுண்டு வீசப் போவதாகவும் அமெரிக்காவுக்கு மரணம், டிரம்பிற்கு மரணம் எனவும் முழக்கமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், அவரை மடக்கிப் பிடித்து விமானம் தரையிறங்கியவுடன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.