ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்கு ஜெர்மனியில் 100 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரீட்லிங்கன் நகர் அருகே ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.