காங்கோவில் தேவாலயத்திற்குள் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதனால் அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடிய நிலையில் அவர்களை பயங்கரவாதிகள் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். மேலும் தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.