பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த ஒரு வாரமாக ஆடி திருவாதிரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரகதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
சோழர்களின் சிற்பக் கலைகள், கோயில் சிற்பங்கள், ராஜேந்திர சோழனின் போர் வெற்றிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் கல்வெட்டு சான்றுகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி, அதன் சிறப்புகள் குறித்து தனது உரையில் எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி நிகழ்ச்சியை முடித்து புறப்பட்ட நிலையில், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.