நெல்லையில் நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக செயற்குழு கூட்டத்தில், இந்து இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மாவட்டம், காரையிருப்பு பகுதியில் உள்ள அமிர்த வித்யாலய பள்ளியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில உலக இணைப் பொது செயலாளர் ஸ்ரீமான் ஸ்தாணுமாலயன், மாநிலத் தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஸ்ரீ லக்ஷ்மண நாராயணன், மாநில துணைத் தலைவர் ஸ்ரீமதி பத்மாவதி மகாராஜன், வட மற்றும் தென் தமிழக அமைப்புச் செயலாளர் ஸ்ரீ பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவும், சனாதன தர்மத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை பாதுகாப்பு வேண்டும், கோயில்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் திருட்டுகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.