கேரளாவில் பெய்த கனமழை காரணமாக திருச்சூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. வரும் 30ம் தேதி வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள்n அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.