தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக எனக் குற்றம் சாட்டினார்.
அதேபோல் போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் எனப் பெண்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களுக்கு ஆண்டு தோறும் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டுமென்றும் அன்புமணி வலியுறுத்தினார்.