ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மறைமாவட்டத்தின் கீழ் உள்ள 123 ஆர்.சி பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து 2 சதவீதத்தை ஆர்.சி நிர்வாகத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் நடைபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாதம் 2 சதவீதம் ஊதியத்தைச் செலுத்தினால் ஆசிரியர்களின் குடும்பம் பாதிக்கும் என ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் கூறியுள்ளார்.
மேலும், ஆயர் உத்தரவைத் திரும்பப்பெறாவிட்டால், போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.