வாஷிங்டன் டென்னிஸ் போட்டியில் அன்னா கலின்ஸ்கயா, லெய்லா பெர்னாண்டஸ் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை எம்மா ரடுகானு, ரஷ்ய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார்.
இதில் 6-4, 6-3 என்ற செட்கணக்கில் அன்னா கலின்ஸ்கயா வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலெனா ரைபாகினாவை 6-7,7-6, 7-6 என்ற செட் கணக்கில், கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் வீழ்த்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் அன்னா கலின்ஸ்கயா, லெய்லா பெர்னாண்டஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.