காமராஜரைச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவாவை கண்டித்து மதுரை சமயநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா, காமராஜரை இழிவாகப் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து மதுரை சமயநல்லூர் காவல் நிலையம் அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.