தாய்லாந்து ராணுவத்தினர் பதுங்கியிருந்த இடத்தின் அருகே கம்போடிய பீரங்கி குண்டு விழுந்து வெடித்து சிதறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தாய்லாந்து – கம்போடியா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில், தாய்லாந்தின் ராணுவ வீரர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய இடத்தில், கம்போடிய ராணுவம் வீசிய பீரங்கிக் குண்டு விழுந்து வெடித்தது. இதில் தாய்லாந்து ராணுவத்தினர் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.