அமெரிக்காவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர்.
மிக்ஸிகன் மாகாணத்தில் உள்ள டிராவர்சி நகரில் தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.