சேலம் அரசு மருத்துவமனையில் எலிகள் உலாவரும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாகச் செயல்படும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையின் உள்நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நள்ளிரவில் எலிகள் உலாவும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை எலிகள் சாப்பிடுவதாக வருவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எலித் தொல்லை தொடர்பாகச் செவிலியர்களிடம் தெரிவித்தால், அரசு மருத்துவமனை அப்படித்தான் இருக்கும் என்று பதிலளிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனையின் வார்டில் நிலவும் எலித்தொல்லையைப் போக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.