ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து காணப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதியில் அதிகளவில் நீர்வரத்து காணப்படுகிறது. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாகக் காணப்பட்ட நீர்வரத்து, தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழக காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.