செந்தில் பாலாஜி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்கக் கூடாது எனத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கார்த்திகேயன் என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், இதுதொடர்பாக ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.