துல்கர் சல்மான் நடிக்கும் “காந்தா” படத்தின் டீசர் வெளியானது.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து நடிக்கும் ‘காந்தா’ படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளையொட்டி, ‘காந்தா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.