மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெண்ணையும், குழந்தையையும் தாக்கியதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்வைத்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர்.
வங்க மொழி பேசும் பெண்ணையும், அவரது குழந்தையையும் டெல்லி போலீசார் தாக்கியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள கிழக்கு டெல்லி துணை ஆணையர் அபிஷேக் தானியா, அந்த வீடியோ அடிப்படை ஆதாரமற்றதென மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ வேண்டுமென்றே சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.