குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேலான கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் 75 குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, இலவச வீட்டுமனை பட்டா இருந்தும் வீடு கட்ட போதிய வசதியில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு, அரசின் கனவுத் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்ட உதவிகள் செய்யப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.